தவெக வேட்பாளர்களை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு.!

இடைத் தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி கருங்குழி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பொதுமக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சியில் இணைந்ததன் விளைவாகவே இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதாகத் தெரிவித்தார். எனவே இந்த இடைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெறக் கூடாது என்று கூறினார். மேலும் அவர் வெற்றி பெற்றால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜினாமா செய்து, வேறு கட்சியில் சேர்வதற்கு ஊக்கமளித்து விடும் என்று கூறினார். தாராபுரம் தொகுதியிலும் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறினார். சட்டமன்றத்தை, சட்டமன்றமாக நடத்த வேண்டும் சண்டை மன்றமாக நடத்தக்கூடாது என்று தெரிவித்தார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *