ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிருக்கான 60 கிலோ எடை பிரிவு வுஷூ இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிருக்கான 60 கிலோ எடை பிரிவு வுஷூ இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, சீனாவின் ஜாங் சியாவோயுவை எதிர்கொண்டார். இதில் ரோஷிபினா தேவி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இறுதியில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், தொடர்ச்சியாக 3 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வுஷூ வீராங்கனை என்ற பெருமையை ரோஷிபினா தேவி பெற்றுள்ளார்.

