அமெரிக்காவுக்கு ஈரானின் முன்னாள் தளபதி யஹ்யா ரஹீம் சபவி கடும் எச்சரிக்கை.!

அமெரிக்கா – ஈரான் போரை இந்தியப் பெருங்கடல் வரையில் விரிவுபடுத்துவோம் என்று ஈரானின் முன்னாள் உச்சதலைவரின் ஆலோசகர் யஹ்யா ரஹீம் சபவி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போதும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானின் முன்னாள் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனியின், ஆலோசகர் யஹ்யா ரஹீம் சபவி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்கா தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், தற்போது நீடித்து வரும் இந்தப் போரை இந்தியப் பெருங்கடல் வரையில் விரிவுபடுத்துவோம் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *