SA vs AUS : ஆஸ்திரேலியாவை சாய்த்தது தென்னாப்பிரிக்கா..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது.
இதில், அதிரடியாக விளையாடிய மேத்யூ பிரீட்ஸ்கி 112 ரன்களும், மார்கோ யான்சென் 75 ரன்களும் எடுத்து அசத்தினார்.  இதையடுத்து, 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், அதிகபட்சமாக மிட்சேல் மார்ஸ் 60 ரன்களும், மேட் ரென்ஷா 44 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *