Sericulture: பட்டுப் புழு வளர்ப்பில் அதிக லாபம்.. விவசாயிகள் அசத்தல்!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக  மல்பெரி பயிரிட்டுப் பட்டுப் புழு வளர்ப்பு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பட்டுப் புடவைக்குப் புகழ்பெற்றது . அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாகப் பட்டுப் புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகச் சிறுநாத்தூர் கிராமத்தில் மல்பெரி பயிர் பயிரிட்டு வருகின்றனர்.

இது வரட்சி தாங்கும் பயிராகும்.  இயற்கை உரமான மாட்டு சானம், தழை, ஆகியவை பயன்படுத்தி பயிரிட்டுப் பட்டுப் புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். இந்தப் பட்டுப் புழு வளர்த்துப் பட்டு எடுக்க மொத்தம்  27 நாட்கள் ஆகின்றனர்.

இந்தப் பட்டுப் புழு வளர்ப்புக்கு கிருஷ்ணகிரியிலிருந்து பட்டுப்புழு முட்டை கொண்டுவந்து பதப்படுத்தப்படுகிறது .10 தொகுதி கொண்ட முட்டையை வாங்கி வந்து வைக்கின்றனர். அவை 3000 முதல் 5000 வரையிலான புழுக்களை உருவாக்குகிறது.  முட்டை  3  நாட்கள் இருட்டு அறையில் வைக்கப்பட்டு பின்பு 7 நாட்கள் இருட்டு மற்றும் வெளிச்சம் கொண்டு மல்பெரி இலையைப் பொடியாக்கி 5 நாட்கள்வரை அவற்றிற்கு உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்பிறகு அலமாரி அமைத்து  மல்பெரி இலைதண்டு 15 நாட்கள்வரை போடப்படுகிறது. பின்பு புழுக்கலானது  கூடு வளையில்  மூன்று நாட்கள்வரை நூல் சுற்றும் . 2  நாட்களுக்குப் பிறகு  எடுக்கப்பட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தர்மபுரி பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது.

இந்தப் பட்டுப் புழுவிலிருந்து வரும் பட்டு 27 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்படுகிறது.  80 கிலோ முதல் 100 கிலோ வரை பட்டுக் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு வேலை செய்யக் குறைந்த ஆட்கள் இருந்தாலே போதும். பட்டுப் புழு வளர்ப்பதற்கு   5,000 ரூபாய் வரை செலவாகிறது.  இந்தச் செலவினங்கள் போக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.  என விவசாயி  அண்ணாமலை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பட்டுப் புழு வளர்ப்பவர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *