Kanalabadi Panchayat: புதிய கட்டிடங்கள் திறப்பு!

கீழ்பென்னாத்தூர் பகுதியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டிபல்வேறு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கானலாப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம், சிறுநாத்தூர் கிராமத்தில் 13,67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் நாரியமங்கலம் கிராமத்தில் 13,67 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சோமாசிபாடி கிராமத்தில் 19,62 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர்  அய்யாகண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், பாக்கியலட்சுமி லோகநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட அலுவலர் மீனாம்பிகை, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி குப்புசாமி, திமுக கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *