Septic Tank : கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: 3 பேர் கைது

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டு வாசலில் குழந்தையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகப் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

சிறுமி லியா உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளியில் குழந்தைகள் நல குழு ஆய்வு. விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் சோதனை. 2 பெண்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருனின்றர்.

பள்ளியில் ஆய்வு முடித்தபின், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாளுடன் குழந்தைகள் நல குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *