
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில்,
மேலும் இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மாணவியிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளி ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு சார் என்று கூறி பேசியதாகச் மாணவி உறுதியாகத் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஞானசேகரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் பழைய வீடியோவில் திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை விசாரிக்கக் காவல்துறை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 4 பெண்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல். யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும் புகார் கொடுங்கள், உங்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனச் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.




