செந்தில் பாலாஜி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் : எல். முருகன்.!

கரூரில் செந்தில் பாலாஜி நின்றால் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் யாகத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் பழனி தண்டாயுதபாணி சாமியிடம் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலைப் பெற வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிடாதது குறித்தக் கேள்விக்கு, கரூரில் செய்த முறைகேடுகளால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால், அங்கே நின்றால் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற பயத்தினால்தான் அவர் கோயம்புத்தூருக்கு மாறியிருக்கலாம் என்று விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *