“மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது” – மசூத் பெஷெஸ்கியான் திட்டவட்டம்!

மிரட்டல்கள் மற்றும் அத்துமீறல்கள் மூலம் தங்களைப் பணிய வைக்க முடியாது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் பேசினார். அப்போது பேசிய அவர், நாங்கள் தங்களை தற்காத்துக் கொண்டு வருவதாகவும், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார்.
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களால் அப்பாவி மக்களை இழந்துள்ளோம் என்று கூறினார். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
எனவே, நாங்கள் முழு பலத்துடன் அந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். தங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், அதற்காக நாங்கள் பணிந்து போக முடியாது என்றும் கூறினார். எனவே, அமைதியான முறையிலான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதுமே தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், மிரட்டல்கள் மற்றும் அத்துமீறல்கள் மூலம், தங்களை பணிய வைக்க முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *