ஜம்மு காஷ்மீருக்கு பயணம் சென்ற ராஜ்நாத் சிங், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுடன் உணவருந்தல்..!

Advertisements

ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுடன் உணவருந்தினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.

இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். பின்னர், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *