Advertisements

சென்னை :
புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லபட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதயவியல் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisements

