TNPL 2024 : சேலம் அணியை வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி !

Advertisements
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி, திருப்பூர்  அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல். தொடரில் நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், திருப்பூர் தமிழன்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 79 ரன்களும், சாத்விக் 50 ரன்களும் அடித்தனர்.  இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி, திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *