தவெகவுக்காக அயராது உழைப்பேன்,செங்கோட்டையன்!

தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெற்றி நடை போடுவதற்கு அயராக உழைப்பேன் என்று செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் தமிழக வெற்றிக் கழககத்தின் மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்  தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர அயராக பாடுபடுவேன் என்று தெரிவித்தார். பின்னர், அதிமுகவில் இருந்து வேற யாரும் சேர்வார்களா என்றக் கேள்விக்கு, அதைச் சொன்னால் பிரச்சனை உருவாகும் எனக் கூறினார்.

மேலும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராக உழைப்பேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர், பிரச்சாரம் குறித்து  தலைவருடன் கலந்து உரையாடி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம்  என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்ல்கின்றேன் என்று கூறினார். இதையடுத்து, செங்கோட்டையன் வாகனத்தில் தவெக கட்சி கொடி மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *