செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல்,அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்றும், அவர் தவெகவை பாஜக கூட்டணிக்கு இழுத்துக் கொண்டு வருவதற்காகத் தான் சென்றிருப்பதாகவும் தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாளையொட்டிப் புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்றும், அது உண்மையா இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும் என்றும் கூறினார். செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதால்தான் சேகர்பாபு அழைத்தபோதும் அவர் திமுகவுக்கு வரவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *