ரஷ்யாவை உலக நாடுகள் தட்டிக் கேட்க வேண்டும் என ஜெலன்ஸ்கி ஆவேசம்.!

ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் தகுந்த கண்டனம் தெரிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா 500க்கும் மேற்பட்ட இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் பதிவில், ரஷ்யா உக்ரேனியப் பொருளாதாரத்தை அழித்து, அதன் மூலம் நமது எதிர்ப்பை முறியடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மருந்தகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய கிடங்குகளை அழித்து தங்கள் மக்களின் மன உறுதியை உடைக்கப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் தகுந்த கண்டனமும் பதிலடியும் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *