“இபிஎஸ்-க்கு தண்டனை அளிக்கும் ஜெயலலிதாவின் ஆத்மா…….!”

ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமிக்குத் தண்டனை அளித்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, மக்கள் விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.
அதிமுகவின் உட்கட்சிப் பிரிவு குறித்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், தலைவர்களையும் மக்களையும் மதிக்காதவர்களுக்கு இதுபோன்ற சரிவு ஏற்படத்தான் செய்யும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அத்திக்கடவு–அவினாசி திட்டம் குறித்து பேசும்போது, அந்தத் திட்டத்தின் விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் தேவையில்லை, தன் படம் மட்டும் போதும் என நினைத்தவரின் நிலை இன்று என்ன என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் படம் இன்றும் தன் பாக்கெட்டில் உள்ளதாகத் கூறினார். மேலும், ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்குத் தண்டனை அளித்து கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *