பருத்தி வரி ரத்து செய்க : பிரதமருக்கு முதல்வர் கடிதம்….!

11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதில், அண்மை காலமாக, பருத்தி விலை உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பருத்தியின் விலை கடந்த இரண்டு மாதங்களில் கண்டி ஒன்றுக்கு 54 ஆயிரத்து 700 லிருந்து 67 ஆயிரத்து 700 அதாவது, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நூல் விலை கிலோவுக்கு 301லிருந்து 330 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும், ஆனால் பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

எனவே, மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதுள்ள 11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை உலக அளவில் போட்டித்திறனுடன் திகழ்வதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *