“கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்பு……!”

Advertisements

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில்  மே 18 ஆம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 140 சட்டமன்றத் தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றி வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் மற்றும் பிற அமைச்சர்கள் வருகிற மே 18-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பதவியேற்கின்றனர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பதவியேற்பு விழாவிற்கு மற்ற மாநில தலைவர்களையும் தேசிய தலைமை அழைக்கும் என்று கூறினார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில்  மே 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அவர் கூறினார். 2006 முதல் 2011 வரை தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, சட்டமன்ற நடவடிக்கைகளில் தனக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியது முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தான் என்று குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *