கொங்கு மண்டலத்தில் ஆடு புலி ஆட்டம்; யாருக்கு வெற்றி? செங்கோட்டையன் சாதிப்பாரா?

Advertisements
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது காரணம் அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை ஒரு கட்டத்தில் திமுக கைப்பற்றியது இப்போது கொங்கு மண்டல கதாநாயகனாக வலம் வரும் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் மூலம் அங்கு களம் இறங்குகிறார் ஆகவே முக்கோணத் தேர்தலை சந்திக்கும் கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
கொங்கு மண்டலம் எனக் குறிப்பிடப்படும் மேற்கு மண்டலத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் தர்மபுரி நாமக்கல் கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ளடங்கி இருக்கின்றன இந்த மேற்கு மண்டலம் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் இதயம் எனக் கூறும் அளவுக்கு கட்சியின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருக்கிறது .2001 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 55 தொகுதிகளை கைப்பற்றியது 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 47 தொகுதிகளை கைப்பற்றியது.
இதேபோல் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை பொள்ளாச்சி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் ஆகிய தொகுதிகளை அதிமுக தான் கைப்பற்றியது .இது போன்று அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த கொங்கு மண்டலத்தை 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது 24 தொகுதிகளை மட்டுமே திமுக கைப்பற்றியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முறை கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என திமுக தரப்பில் திட்டமிடப்பட்டு செந்தில் பாலாஜியை தேர்தல் பொறுப்பாளராக களம் இறக்கி இருக்கிறது.செந்தில் பாலாஜியும் இரவு பகல் பாராமல் இப்பொழுதே தனது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். கொங்கு மண்டல மக்களின் மனநிலையை நன்கு புரிந்து வைத்திருக்கும் செந்தில் பாலாஜி அதற்கு தக்கபடி பல திட்டங்களை தீட்டி களம் இறங்கி இருக்கிறார்.இதற்கிடையே கொங்கு மண்டலத்தை அப்படியே முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்ற நிலையில் அங்கு பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என கணக்கு போட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் விலக்கப்பட்டதால் கொங்கு மண்டலத்தின் மீது அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.இந்த சூழ்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பு பணி தரப்பட்டிருக்கிறது.கொங்கு மண்டலம் முழுவதும் செங்கோட்டையனுக்கு நல்ல செல்வாக்குண்டு என்பதை அறிந்து தான் இந்த பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதனால் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் தலைமையில் தமிழக வெற்றி கழகம் தீவிர தேர்தல் பணிக்களத்தில் இறங்குகிறது.எனவே இந்த முறை கொங்கு மண்டலத்தில் மிக கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இறுதியில் வெற்றி பெறப்போவது முதல்வர் மு க ஸ்டாலினா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியா? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *