Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது
ஏற்கனவே திமுக உடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தங்களுக்கு 15 தொகுதி ஒதுக்கி தர வேண்டும் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் செலவுக்கு தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாகவும் இதற்கு மு க ஸ்டாலின் மறுத்ததால் கூட்டணி விவகாரத்தில் முறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து தனது பிரச்சார பயணத்தில் திமுகவை அட்டாக் செய்து பேசி வருகிறார் தற்போது உச்சகட்டமாக செந்தில் பாலாஜி மீது அவர் கடுமையாக குற்றம் சாட்டி பேசியிருக்கிறார் .இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம் .உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயண பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் பேசும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மக்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் தற்பொழுது தேமுதிக பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது தேமுதிக கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது எல்லா கட்சிக்காரர்களும் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்கிற ரீதியில் பேசி வருகிறார்
இதில் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் தனியார் அரங்கம் ஒன்றில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது கோவை மாவட்டத்திற்கு நான் ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால் எனது தாயார் மறைவினால் வர இயலாமல் போய்விட்டது .புயலே வந்தாலும் நமது ஆலோசனைக் கூட்டம் நடந்தே தீரும் எந்தவித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது இன்று காலை கோவையில் காவல்துறையினர் நமது கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள் ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்று கேள்வி எழுப்பினார் அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டார்கள்.
இதனை அடுத்து பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் பேசும்பொழுது தேமுதிகவை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று எண்ணும் கூட்டம் அது. அவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது தயவு செய்து உங்கள் வேலையை தேமுதிகவிடம் காட்டாதீர்கள் உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் காசு கொடுக்காமல் கூட்டத்தை கூட்ட முடியுமா எங்கள் கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா
கேப்டன் மறைந்து விட்டார் தேமுதிக மறைந்து விட்டது என்று கூறியவர்கள் எல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை இருக்கிறது அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் காவல்துறையில் இருப்பவர்கள் கேப்டனின் உருவங்கள் தான் கேப்டனை பார்த்து தான் காவல்துறையிலும் இராணுவத்திலும் பலரும் இணைந்தார்கள் இதனை ராணுவத்தில் இருப்பவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள்
தேமுதிகவை பார்த்து பலரும் வியந்து போய் இருக்கிறார்கள் நாங்கள் ஆளும் கட்சியும் இல்லை ஆண்ட கட்சியும் இல்லை தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் இங்குள்ள ஒவ்வொரு ஆண்களும் கேப்டன் தான் பெண்கள் ஒவ்வொருவரும் லேடி கேப்டன் தான் கேப்டன் ஒருபுறம் லேடி கேப்டன் ஒருபுறம் இருக்கும் வரை இந்த கட்சியை யாராலும் தொட முடியாது 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய வெற்றி பெறும் நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையில் பயணிப்போம் என்று பேசியவர் முக்கிய தகவல் ஒன்றையும் தெரிவித்தார்
வெகு விரைவில் இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் அறிவிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார் .மேலும் அவர் பேசும் பொழுது விஜய பிரபாகரன் ஜூனியர் கேப்டன் கோவையின் செல்ல பிள்ளை என்று குறிப்பிட்டார்.பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசி வருவதால் திமுகவுடன் அவர் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது இதன் மூலம் அதிகபட்சமாக அவர் மீண்டும் அதிமுக விலேயே இணையலாம் என தெரியவந்துள்ளது.
Advertisements


