Senegal Capsize: கப்பல் கவிழ்ந்த விபத்தில் 63 அகதிகள் பலி!

Senegal | Capsize | Refugee

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது…

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 101 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கிக் கடந்த ஜுலை மாதம் 101 பேர் படகில் புறப்பட்டனர். அவர்கள் கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் திடீரெனப் படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 38 பேரைப் பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 63 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விபத்து நடந்தது எப்போது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே, கடந்த 10ம் தேதி அன்று துனீசியா அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 41 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனீசியாவிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலியை நோக்கிப் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அது சிசிலி நீரிணைப் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக நீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். 2023- ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் துனீசியா வழித் தடத்தில் சுமார் 800 அகதிகள் கடல் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *