தவெக-வுடன் கூட்டணியா…? டெல்லி தலைமை முடிவு செய்யும்…! – செல்வப்பெருந்தகை பதில்….

Advertisements
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். தங்களது கூட்டணி கட்சியான திமுக களத்தில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதாகக் கூறினார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்கள் 108 இடங்களை வென்றுள்ளனர்.
எனவே, அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை. இதை அவர்கள் எவ்வாறு கையாளுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *