முதல் இடத்தில் எப்போதும் அ.தி.மு.க. தான் உள்ளது – விஜய்க்கு மறைமுக பதிலடி..

Advertisements

நீலகிரி மாவட்டம், கூடலூர் பழையப் பேருந்து நிலையத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசிய போது, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழல், கலெக்சன் உள்ளிட்டவைக்கு தி.மு.க. ஆட்சி தான் ரோல் மாடல் என தெரிவித்தார்.

பின்னர், அ.தி.மு.க. பொறுத்தவரை கூட்டணியை நம்பி இல்லை மக்களை நம்பியிருக்கிறது என கூறினார். இதையடுத்து, தேர்தல் களத்தில் அ.தி.மு.க. முதல் இடத்தில் இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி நடக்கிறது என்றார்.

மேலும், இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *