முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்……..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து, தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது.  இதில், குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.

கவர்னர் மாளிகையின் செயலாளர் மூலமாக் அந்த கடிதம் பெறப்பட்டு, கவர்னரிடம் வழங்கப்பட உள்ளது. இந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் கவர்னர், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *