Selvaperunthagai:சொந்த காலில் நிற்பது எப்போது?: செல்வபெருந்தகை பேச்சு: திமுக அதிர்ச்சி!

K. Selvaperunthagai
Advertisements

சென்னை: ‘எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?’ எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சால் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.

Advertisements

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:

தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளைச் சாராத நிலை வேண்டும் என்றால் அதற்குத் தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.
அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். காங்., தனித்து போட்டியிடுவது குற்றம் அல்ல. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சால் கூட்டணியில் உள்ள திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக் காங்., திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *