இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பாகப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது… MOU
புதுடில்லி: சவுதிஅரேபியாவின் இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுக்கு, டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இளவரசரை வரவேற்றனர். மேலும் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சல்மானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பாகப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியா தலைமை ஏற்று நடத்திய, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாகச் சவுதி பிரதமர் முகமதுபின் சல்மான் பாராட்டினார்.


