செல்வ பெருந்தகைக்கு எதிர்ப்பு;  திமுக – தவெக: 2 ஆக உடையும் காங்கிரஸ்.! 

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் மூன்று அமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றது. இதற்கு திமுக மேல் இடம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில்,  தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது .
இந்த நிலையில் ,  காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே உள்கூத்து மோதல் வெடித்து தற்பொழுது காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக கூட்டணி மிகவும் பலமாக அமைந்திருக்கிறது.  இந்த கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள்,  மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 10 கூட்டணி கட்சிகள் இணைந்து மிகப் பலமாக காட்சியளிக்கின்றன.
இதில் , தற்பொழுது கூடுதல் தொகுதிகள் தராவிட்டாலும் திமுகவுடன் தான் எங்கள் கூட்டணி தொடரும் கூட்டணிக்காக நாங்கள் கட்சி மாறப்போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார் . இதனிடையே மதிமுக தரப்பிலும் சமரசம் ஏற்பட்டிருக்கிறது . இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தனது கோரிக்கைகளை விடாப்பிடியாக முன் வைத்து வருகிறது .
இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் ஆக இரண்டு வேறு பிரிவாக தற்பொழுது காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். இதில் ஒரு பிரிவினர் தொடக்க கால முதலே செல்வபெருந்தகையின் தலைமையை ஏற்கவில்லை . காரணம்,  ஆரம்பகால அரசியல் கட்டங்களில் செல்வபெருந்ததை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்பொழுது , இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைமை நிர்வாகியாக இருந்த கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை தெரிவித்திருக்கிறார் . அவர் கூறும் பொழுது செல்வப் பெருந்தகை விடுதலைப் புலியின் ஆதரவாளர் ராஜீவ் காந்தி மரணத்தை கொண்டாடியவர் . சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட போது அவர் சாதாரண உறுப்பினர் அப்படியான விடுதலைப் புலி ஆதரவாளரான செல்வப் பெருந்தகை காங்கிரஸ் தலைவராக இருப்பதை அங்கு இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் வெறுக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பினால் ஒரு தரப்பினர் மு க ஸ்டாலின் உருவ பொம்மையை கூட எரிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் . காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைய போகிறது . ஒரு தரப்பினர் திமுகவுடனும் ஒரு தரப்பினர் விஜயுடனும் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார் .
இந்த நிலையில்,  காங்கிரஸ் மேலிடத் தரப்பில் திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டாலும் தமிழக காங்கிரஸ் வைத்திருக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்க வேண்டும் என்பதில் இன்னமும் விடாப்படியாக இருக்கிறார்கள் . இதனால் மிகப்பெரிய குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது …
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *