இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கட்டுப்பாட்டு அறை திறப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கட்டுப்பாட்டு அறையை இந்திய வெளியுறவுத்துறை திறந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து,  ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்கி வருகிறது. இதில் பலவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்த நிலையில், அதையும் தாண்டி சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தங்கள் இலக்கை தாக்கின. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல், தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கட்டுப்பாட்டு அறையை இந்திய வெளியுறவுத்துறை திறந்துள்ளது. மேலும், டெஹ்ரானில் உள்ள இந்தியர்களுக்காக 24×7 அவசர உதவி எண்களும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *