புதிய சிக்கலில் அண்ணாமலை: சிறைக்குச் செல்ல வாய்ப்பு.?

Advertisements
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை மீது திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன . இதன் மூலம் அண்ணாமலை மீண்டும் புதிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.  இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம் .
தஞ்சாவூர் மாவட்டம்  – மைக்கேல்பட்டி என்ற கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கூறியிருந்தார். இது அப்பொழுது மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. அந்த மாணவி குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார் .
இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரித்த போது தஞ்சாவூர் மாவட்டம் , மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் லாவண்யா என்ற மாணவி தங்கி படித்து வந்தார் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் . இந்த விசாரணையில் பள்ளியில் நடந்த துன்புறுத்தல்கள் தான் காரணம் என்றும் வீட்டில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமலும் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது .
ஆனால் மாணவி லாவண்யா மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தது . இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை தான் முன் வைத்தார்.  இதைத்தொடர்ந்து மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி வேண்டும் என்றும் குறிப்பாக கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் .
ஆனால் அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் அவர் மத கலவரத்தை தூண்டுகிறார் எனவே அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என திமுக தரப்பில் குரல்கள் எதிரொலித்தன . இந்த நிலையில் , டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது . அதில் மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
இதனால் ,  அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை மதரீதியில் பிரிக்க முயற்சித்ததாக தற்பொழுது திமுக தரப்பில்  தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் . இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மீது வழக்கு தொடர்ப் படலாம் என தெரிகிறது .
இந்த வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது அவர் மதப் பிரச்சினையை எழுப்பியதாக கூறி கைது செய்யப்படலாம் என்ற நிலையும் இருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை ஆதரவாளர்கள் மனக்குமுறலில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *