நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அனைவரும் வாழ்த்து.!

Advertisements

உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் பிரபல திரைவுலக நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் பிரபல திரைவுலக நடிகர் கமல்ஹாசன் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இதையடுத்து, 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபல திரைவுலக நடிகரும் நாடளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதைத்தொடர்ந்து, இவரது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கமல் ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *