சட்டமன்றத்தில் தாங்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விவுக்கும் முதலமைச்சர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும், முன்கூட்டியே மனப்பாடம் செய்து வந்து ஒப்புவித்தல் போட்டி போல அவர் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:”நாங்கள் வைத்த ஒரு கேள்விக்குக் கூட முதல்வர் இதுவரை பதில் சொல்லவில்லை. எங்களுடைய கேள்விகளுக்குத் திங்கள்கிழமை பதில் சொல்வேன் என்று கூறிச் சென்றவர்,
இன்று அதற்குத் தகுந்தவாறு தயாராக வருவார் என்று நினைத்தேன். ஆனால், எதையும் எதிர்கொள்ளாமல் மனப்பாடம் செய்துவிட்டு வந்து, ஏதோ ஒப்புவித்தல் போட்டி போல சட்டமன்றத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார்” என்றார்.
முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் ஆளுங்க தரப்பிலிருந்து முறையான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

