கப்பல் கட்டும் தளத்துக்காக உப்பளங்களைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து உப்பளத் தொழிலாளர்களும் மீனவர்களும் கருப்புக் கொடி ஏந்திக் கடலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக முள்ளக்காடு, கோவளம் ஆகிய ஊர்களின் அருகில் உள்ள உப்பளங்களைக் கையகப்படுத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு ஊர்களின் மக்களும், உப்பளத் தொழிலாளர்களும் கருப்புக்கொடி ஏந்திக் கடலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் வீடுகளிலும் உப்பளங்களிலும் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.
பாரம்பரியமாக உப்பளமாக உள்ள நிலங்களைப் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசு துடிப்பதாகக் குற்றஞ்சாட்டினர். இதேபோல் மீனவர்களும் இப்பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கப்பல் கட்டும் தளம் வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

