Sellur K. Raju: மதுரை பக்கம் வா.. உன் நாக்கை அறுப்போம்!

Advertisements

மதுரை: ”2ஜி ஊழல் புகாருக்குள்ளான ஆ. ராஜா, எம்.ஜி.ஆரை பற்றி தவறாக பேசியிருக்கிறார். மதுரை பக்கம் வா. உன் நாக்கை அறுப்போம்” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ எச்சரித்துள்ளார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை ‘லுாசு’ என தி.மு.க., கூட்டம் ஒன்றில் எம்.பி., ஆ.ராஜா பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுஇந்நிலையில் மதுரையில் நேற்று தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது:

தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார்களே அதற்குப் பிறகு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்று கருதலாம். ஊடகங்களில் வந்த பிறகு, பொதுச் செயலாளர் பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று அறிவித்த பிறகே கைது செய்யப்பட்டனர்.

2ஜி ஊழல் புகாருக்குள்ளான ஆ. ராஜா, எம்.ஜி.ஆரை பற்றி தவறாக பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவரை ‘பெரியப்பா’ என்று சொல்கிறார். ராஜாவை ஸ்டாலின் கண்டித்து இருக்க வேண்டாமா.

பட்டியல் இன மாணவிக்கு குரல் கொடுக்க வக்கில்லை. நீதாண்டா லுாசு. மதுரை பக்கம் வா. உன் நாக்கை அறுப்போம். ஒருத்தன் தலைவரையும் அண்ணாத்துரையையும் இழிவாக பேசினான். அந்தக் கூட்டணியை முறித்து விட்டோம்.

தி.மு.க., கூட்டணி கட்சியினர் திண்டுக்கல் பூட்டு போட்ட மாதிரி இருக்கிறார்கள். எந்த கட்சிக்கும் நாங்கள் அடிமை இல்லை. மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு உங்கள் அப்பா பெயரை ஏன் வைக்கிறீர்கள். திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் பெயர் வைக்க கூடாதா. லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ., அரசுடன் கூட்டணி சேர்ந்து மந்திரி சபையில் தி.மு.க., இடம் பெறும். இது சம்பந்தமாக மறைமுக பேச்சும் நடத்தி உள்ளார்கள். இவ்வாறு பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *