
தமிழ், தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தன்னை சீனியர் காமெடியன் ஒருவர் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்ததாக கூறி உள்ளார்.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரகதி. இதையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வந்த பிரகதி, சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் வில்லியாக நடித்து அசரவைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்கள் நடித்துள்ள பிரகதி, தான் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது : “ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது என்னுடன் நடித்த முன்னணி காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதோடு, மறைமுகமாக படுக்கைக்கும் அழைத்தார். அவர் சீனியர் நடிகர் என்பதால் அவரை நான் அனைவர் முன்னிலையில் அசிங்கப்படுத்த விரும்பல. அதனால் அன்றைக்கு ஷூட்டிங் முடியும் வரை காத்திருந்தேன்.
ஷூட்டிங் முடிந்ததும் அவரை கேரவனுக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரை உட்கார வைத்து பேசினேன். நீங்க என்னிடம் தவறாக நடந்துகொள்ளலாம்னு நான் ஏதாச்சும் சிக்னல் கொடுத்தனா என்று கேட்டேன். அதற்கு இல்லை என சொன்னார். சரி, என்னுடைய உடல்மொழி எதாவது உங்களுக்கு அப்படி ஒரு என்னத்தை வரவைத்ததா என கேட்டேன். அதற்கு இல்லை என கூறினார். உடனே அவரிடம் நீங்கள் செய்தது மிகவும் கீழ்த்தரமான செயல்.
நீங்கள் என்னிடம் அப்படி கேட்ட உடனே அந்த இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி இருப்பேன். உங்களுக்கென ஒரு இமேஜ் இருக்கிறது. அது உடைந்துவிடக் கூடாது என்பதால் தான் இப்படி தனியாக அழைத்து சொல்கிறேன் எனக்கூறி அந்த காமெடி நடிகருக்கு செம்ம டோஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார் பிரகதி. இருப்பினும் அந்த காமெடி நடிகர் யார் என்கிற தகவலை பிரகதி வெளியிடவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த நடிகர் யார் என வலைவீசி தேடி வருகின்றனர்.

