நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் ஒரு தேர்தல் நாடகம் என சீமான் விமர்சனம் செய்துள்ளார். மதுரை காளவாசல் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திபபில் கூறுகையில்,கொள்ளையடிப்பது, திருடுவது போன்ற சமூக குற்றங்கள் எல்லாம் செய்துவிட்டு, கோவில் திருவிழா என்றவுடன் காப்பு கட்டிக்கொண்டு கொட்டடித்து சாமி வந்து ஆடுவார்கள். அது போல தான் இந்த கச்சத்தீவு மீட்பு குறித்த பேச்சும். அது கோவில் திருவிழா, இது தேர்தல் திருவிழா.
இந்தியாவின் அன்றைய பாதுகாப்பு கருதி கச்சத்தீவை லஞ்சமாக கொடுத்து. இலங்கையை தன்பக்கம் வைத்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அது தாரை வார்க்கப்பட்டது. இன்று இலங்கை சீன ஆக்கிரமிப்பில் உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளான போது அவர்களை பாதுகாக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. கச்சத்தீவு தீர்மானத்தால் பலன் இருக்காது. இது போல பல தீர்மானங்கள் மத்திய அரசின் கிடப்பில் உள்ளன.வக்ஃபு திருத்த மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தது மறைமுகமாக மசோதாவுக்கு ஆதரவு அளித்தது போலத்தான். இந்த தவறை ஏன் அவர் செய்தார் என தெரியவில்லை.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் ஒரு தேர்தல் நாடகம். தேர்தல் நாடகங்களில் நான் பங்கேற்பது இல்லை. நீட் தேர்வுக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்துமாறு கோரிக்கை வைத்ததே நான் தான்.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என அரசுகள் சொன்ன பின்னர் இந்த கூட்டம் எதற்கு? நீட் தேர்வுக்கு ஆதரவளித்தது யார்? ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என கடிதம் எழுதி முரசொலியில் பதிவு செய்தது யார் கலைஞர் தான்( கலைஞர் கருணாநிதி குரலில் மீமிக்கிரி செய்தார்)
அதிகாரம் நிலையானது அல்ல, சேர, சோழ பாண்டிய, முகலாயர் என எத்தனைதோ சாம்ராஜ்யங்கள் சரிந்து போயிருக்கிறது. காங்கிரஸ் கட்சி சரிந்து பல்வேறு மாநிலங்களில் கட்சிகளுடன் இணைந்து தொங்கிக் கொண்டு உள்ளது.
எங்களுடைய கொள்கைகள், திட்டங்களை சரியென கருதி கூட்டணி வைக்க யார் வந்தாலும் அவர்களை ஏற்போம். வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. வாக்குக்கு பணம் கொடுத்து பெறுகிற அதிகாரம், மக்களுக்கானதாக இருக்காது. தமிழகத்திலேயே 8 கோடி மக்களுடன் பெரிய கூட்டணியை நாங்கள் தான் வைத்துள்ளோம். எனவே, தனித்து நின்று அரசியல் அதிகாரத்தை அடைய முடியாது என்று எங்கும் நிரூபிக்கப்படவில்லை. நாய் இருந்து நாள் வீட்டில் நக்கிக் குடிப்பதை விட சிங்கம் போல கர்ஜித்து போ எனபோல் இருப்போம். நாங்கள் சிங்கமும் அல்ல புலி காட்டில் சுதந்திரமாக அழைந்து திரிந்து வேட்டையாடி செத்துப் போவோம் என பேசினார்.


