அதிமுகவின் முடிவு மிக மிகத் தவறானது என்று சீமான் கருத்து!

பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவின் முடிவு மிக மிகத் தவறானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சாதி அரசியல் உள்ளதாகச் சீமான் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக எடுத்திருக்கும் முடிவு மிக மிகத் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிவாரியான கணக்கீடு நடத்தி அனைத்துச் சாதியினருக்கும் அவரவர் விகிதாச்சாரப்படி இடப் பகிர்வு வழங்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *