Advertisements

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. சீமான் – கயல்விழி தம்பதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.
தற்போது இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்திருப்பதற்கு, அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisements



