ஹாங்காங்கில் ஏற்பட்ட தீவிபத்து,உயிரிழப்பு 44 ஆக உயர்வு!

ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள உயர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த தீயானது அருகிலிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களுக்குப் பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறியது. இந்த, சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதையடுத்து, விபத்தில் 279 பேர் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பின்னர், அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மூன்று நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *