Thirupattur: தலையெழுத்தையே மாற்றும் பிரம்மபுரீஸ்வரர்!

Advertisements

இந்த ஆலயத்தில் பிரம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னுடைய சாபம் நீங்குவதற்காகப் பிரம்மன் இத்தளத்தில் சிவபெருமானை 12 சிவலிங்க வடிவில் வழிபட்டதாகத் தலபுராணம் சொல்கிறது…

எந்த ஊரில் வீற்றிருக்கிறார் தெரியுமா? ஜாதகத்தை வைத்து வழிபட்டால் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை படைத்த பிரம்மன் அமைந்துள்ள திருக்கோவிலை பற்றிக் காண்போம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் பிரம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னுடைய சாபம் நீங்குவதற்காகப் பிரம்மன் இத்தளத்தில் சிவபெருமானை 12 சிவலிங்க வடிவில் வழிபட்டதாகத் தலபுராணம் சொல்கிறது.

இதை அடுத்து சாபம் நீங்கப் பிரம்மனுக்கு நீ இத்தளத்திலேயே இருந்து என்னை வழிபடுபவர்களின் தலையெழுத்தை மாற்றுவாயாக என்று ஈசன் அருள் புரிந்தார். அதன்படி இங்கே கோவில் கொண்டுள்ள பிரம்மதேவன் பிரம்மாண்டமான வடிவத்தில் காட்சி கொடுகிறார்.
ஜாதக ரீதியாக வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள் செவ்வாய் தோஷம், திருமணம் கைகூடாமல் போவது போன்ற பிரச்சனைக்கு அவரவர் ஜாதகத்தை இத்தல பிரம்மனின் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தால் பிரச்சனைகள் விரைவில் நீங்கி நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.

பிரம்மன் நவகிரகங்களில் குருவுக்கு அதி தேவதை என்பதால் குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில் இவருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்கிறார்கள். அதோடு புளியோதரை நெய்வேத்தியமாகப் படைத்து மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி பூஜைகள் நடைபெறுகிறது. இப்படி ஜாதகத்தை வைத்து வழிபாடு செய்தால் பிரச்சனைகள் விரைவில் நீங்கி நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *