Advertisements

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகமும் தனித்துப் போட்டியிடும் என தெரிகிறது.ஆனால் யாருடனும் கூட்டணி இல்லை நாங்கள் தனித்தே போட்டியிட போகிறோம் என நாம் தமிழர் சீமான் வழக்கம்போல அறிவித்திருக்கிறார்.அந்த வகையில் வருகிற 21ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
முன்னதாக சென்னை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்பாக யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக மாநாடு வருகின்ற 21ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் போட்டியிடக்கூடிய 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் 117 பெண் வேட்பாளர்களும் 117 ஆண் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள் தற்போதைய சூழ்நிலையில் 200 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி முடிவு செய்யப்பட்டு விட்டார்கள் இன்னும் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன இதில் எட்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள் அதன்படி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பாளர் சரண்யா எழும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் பிரிவு பாசறை மாநில செயலாளர் சி சங்கர் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பெனசான் செரிப் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் தீர்த்தனா வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார் சமூக ஆர்வலர்கள் பாபு மைலன் ராயபுரம் தொகுதியிலும் ரோஷினி வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் சமூக ஆர்வலரான ரோஷினி திருநங்கை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தலில் திருமங்கை ஒருவர் போட்டியிடுவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆன சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக தெரிகிறது வருகிற 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் சீமான் போட்டியிடும் தொகுதி பற்றியும் அறிவிக்கப் போவதாக தெரிகிறது.
இதற்கிடையே கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் சாட்டை முருகனுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என ஏற்கனவே போர் குரல் ஒலித்தது. தற்பொழுது சாட்டை முருகனுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பது வருகிற 21ஆம் தேதி அறிவிப்பின்போது தகவல் தெரிய வரும் சாட்டை முருகனைப் பொறுத்தவரையில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்ற பேச்சு நிலவி வருகிறது.
ஒருவேளை சாட்டை முருகனுக்கு தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படலாம் என்ற சூழ்நிலையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே மதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மல்லை சத்தியா தனியாக புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார் இந்த கட்சிக்காக அலுவலகம் கட்டும் பணி சென்னை நீலாங்கரையில் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது அன்றைய தினம் அவர் திமுகவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப் போவதாக சொல்கிறார்கள்.
ஏற்கனவே திமுகவுடன் வைகோ தலைமையிலான மதிமுக கூட்டணி இருக்கும் நிலையில் மல்லை சத்யாவும் கூட்டணி சேர்ந்தால் குழப்பம் ஏற்படும் சூழ்நிலையும் இருக்கிறது என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements



