திருச்செந்தூர் முருகனிடம் மௌன விரதம்..!

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக ஆகிய இரண்டு பலமான கட்சிகளுக்கு இடையே மிகப் பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட தேர்தல் கருத்து கணிப்புகளின் படி இரு கட்சிகளும் சொற்ப வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி விவகாரம் மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டு மிக மும்மரமாக பணியாற்றி வருகிறார்.இது அல்லாமல் கூட்டணிகள் குறித்தும் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் திடீரென சசிகலாவும் ஓ பன்னீர்செல்வமும் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான ரகசிய திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் முதலமைச்சராகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார்.
ஓ பன்னீர்செல்வம் போலவே டிடிவி தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி நடத்தி வந்தார்.இந்த நிலையில் டிடிவி தினகரன் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டார் ஆனால் ஓ பன்னீர்செல்வத்தை எந்த காரணம் கொண்டும் கூட்டணியில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டார்.இந்த சூழ்நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் ஜே சி டி பிரபாகரன் என பலரும் திமுக பக்கம் தாவி விட்டார்கள்.
தற்பொழுது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே இருக்கிறார் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அதிமுக மட்டுமல்லாது பாஜக வுடனும் கூட்டணி சேர முடியாத நிலைமையில் ஓ பன்னீர்செல்வம் தவித்து வருகிறார்.தற்பொழுது தேர்தல் குறித்து என்ன முடிவு எடுப்பது என்று வழிவகை தெரியாத ஓ பன்னீர்செல்வம்  கடந்த இரண்டு நாட்களாக மௌன விரதம் இருந்து வருகிறார் அவர் திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டுதல் செலுத்தி இருக்கிறார் இதை நிமித்தமாக அவர் தற்பொழுது திருச்செந்தூருக்கு காரில் சென்று முருகனை கும்பிட்டு தன்னுடைய கூட்டணி கோரிக்கையை வைத்திருக்கிறார்.
திருச்செந்தூர் முருகனை தரிசித்த பிறகு தனது மவுன விரதத்தை முடித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பேச இருக்கிறார்.இதற்கிடையே வருகிற சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனது ஆதரவாளர்களை களம் இறப்பதற்கு பல வியூங்களை வைத்திருக்கிறார்.இதன்படி தமிழ்நாடு முழுவதும் சசிகலா ஆதரவாளர்கள் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள். ஏற்கனவே அவர் ஓ பன்னீர்செல்வத்துடன் திரைமறைவில் பேசி இருப்பதாக தெரிகிறது.
ஆகவே இருவரும் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதாக புதிய முடிவு எடுத்திருக்கிறார்கள்.இதன்படி தமிழ்நாடு முழுவதும் சசிகலாவும் ஓ பன்னீர்செல்வமும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள் முன்னதாக 234 தொகுதிகளிலும் சசிகலா ஆதரவாளர்களும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன குறிப்பாக சசிகலா ஆதரவாளர்கள் பெரும்பாலானவர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் சசிகலா அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.சசிகலா ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தேர்தல் களத்தில் இறங்கும் பட்சத்தில் அது அதிமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த  எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார். சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தல் களத்தில் குதிக்கும் பொழுது அதிமுக ஓட்டு வங்கி பிரியுமா என்பது குறித்து அவர் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *