
மிகுந்த வேதனையுடன் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கவுதமி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய பாஜக தலைமைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கனத்த இதயத்தோடு பாஜகவிலிருந்து விலகுகிறேன். 25 ஆண்டுகளாகப் பாஜகவின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உழைத்துள்ளேன். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை.Gautami
அழகப்பன் என்பவர் தன்னிடமிருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாகப் புகார் அளித்திருந்தேன். ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாகப் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.பாஜக வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தும் எனக்குக் கட்சியில் ஆதரவு இல்லை. எனவே மிகுந்த வேதனையுடன் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

