
சீமான் பயிற்சி செய்கிறோம் என்று தொடர்ந்து கூறி பதினைந்து வருடமாக பயிற்சி மட்டுமே செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பாக உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது விவகாரத்தில் எதையும் பேசி பேசி தான் செய்ய வேண்டும் என்பது இல்லை செயலில் அனைத்தையும் தங்கள் முதல்வர் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். சீமான் வெறுப்பு அரசியலை விதைப்பதாகவும், பயிற்சி செய்கிறோம் என்று தொடர்ந்து பதினைந்து வருடமாக பயிற்சி மட்டுமே செய்து கொண்டே இருப்பதாகவும் விமர்சித்தார். கோவில் சொத்துக்களை மீட்க விரைவில் குழு அமைத்து, முறையாக விசாரணை செய்து அனைத்தையும் மீட்டெடுக்கப் படும் என்று கூறினார்.



