அனைத்து கட்சி கூட்டத்தை அவமானமாக கருதுகிறார் : CM விஜயை தாக்கிய உதயநிதி

Advertisements

முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதை அவமானமாக கருதுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பனகல் கட்டிடம் முன்பு தவெக அரசை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் – விவசாயிகள் கலந்து கொண்டு கண்ட கோஷங்களை எழுப்பினர்.

இதன் பின்னர், கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியபோது, வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்றும் ஆனால் இன்று தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது என்றும் தெரிவித்தார். சம்பா சாகுபடி நடைபெறுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நிர்வாக திறனற்ற டம்மி முதல்வராக விஜய் உள்ளார் என விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயில் வடை சுடுகிறார் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதை அவமானமாக கருதுகிறார் என்றும் கூறினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து வலுவாக பேசப்போவதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *