Advertisements

தமிழ்நாட்டுப் பெண்கள் திமுகவை இந்த தேர்தலில் தூக்கியெறிந்தார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுகவை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி என்று குறிப்பிட்டுள்ளார். பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா – தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisements



