தென்பெண்ணை ஆற்றில் வாய்க்கால் அமைக்கும் திட்டம் – சீமான் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அலியாளத்தில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையின் வலப்புறத்தில் ஒன்பது கிலோமீட்டர் நீளத்துக்கு வெட்டப்பட்டுள்ள கால்வாயை 20 கிலோமீட்டர் தொலைவுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் நேரடியாகப் பயன்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்க நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த முனையும் திமுக அரசு, அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் காட்டாதது ஏன்? என்று வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *