சவுதி – ஏமன் போர் உச்சக்கட்டம்.! சவுதியின் அடிமடியில் கைவைத்த ஹவுதி.!

மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பயங்கரமான போர்மேகம் சூழத் தொடங்கியிருக்கு..!

கொஞ்ச நாளாவே சற்றே அமைதியா இருந்த சவுதி அரேபியா – ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதல், திடீர்னு இன்னைக்கு வீரியமடைஞ்சு ரத்தக் களறியா மாறியிருக்கு.. சவுதியின் தலைநகர் ரியாத் உட்பட நாட்டின் 6 மிக முக்கியமான, இதயப் பகுதிகளைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்திய அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கு!

சவுதி அரேபியாவுக்குள் புகுந்து ஹவுதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கும் ரத்தக் கண்ணீர் கதை என்ன? எந்தெந்த 6 இலக்குகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கு? முழு விவரத்தையும் இந்த வீடியோவில் விரிவா பார்ப்போம்..!

இந்த திடீர் தாக்குதலுக்கு உடனடி காரணம் என்னன்னு பார்த்தா… இன்னைக்குக் காலையில ஏமன் நாட்டில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சவுதி அரேபியப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துனாங்க.ஏமன் தலைநகர் ‘சனா’ அருகே உள்ள ‘அல்ஷரியா’ங்கிற ஒரு சிறிய கிராமத்துல இந்த வான்வெளித் தாக்குதல் நடந்தது.

இந்தக் குண்டுவீச்சில் அப்பாவி சிறுவர், சிறுமிகள், பெண்கள் உட்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.36க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வர்றாங்க. தங்கள் நாட்டு மக்கள் மீது சவுதி நடத்திய இந்த கொடூரத் தாக்குதலால் கடும் கோபமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ‘இனி பொறுத்தது போதும்…

சவுதியின் முக்கிய இடங்களை அழிப்போம்’னு உடனடி பதிலடித் தாக்குதலில் இறங்குனாங்க.”அடுத்த சில மணி நேரங்களிலேயே ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ‘யாக்யா சாரி’  ஒரு பரபரப்பான செய்தி குறிப்பை வெளியிட்டார். அதில், சவுதி அரேபியாவின் 6 முக்கிய இலக்குகளைக் குறிவைத்து அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அனுப்பித் தாக்கியதாக அறிவித்தார்.

அவர்கள் குறிவைத்த அந்த 6 இடங்களைப் பார்த்தாலே அதிர்ச்சியா இருக்கு: காலித் சர்வதேச விமான நிலையம்: சவுதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் மிக முக்கியமான சர்வதேச போக்குவரத்து மையம்.அராம்கோ எண்ணெய் நிறுவனம்: சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் தூணாக இருக்கும் கச்சா எண்ணெய் வர்த்தக உள்கட்டமைப்பு.

ரியாத் நீரேற்று நிலையம்: தலைநகர் ரியாத் வாழ் மக்களின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்திற்கு காரணமான மையம்.
நஜ்ரான் தேசிய பாதுகாப்பு படை முகாம்: சவுதியின் முக்கிய ராணுவத் தளம். மற்றும் 6. சவுதி அரேபியாவின் மேலும் 2 ராணுவ நிலைகள். ‘நாங்கள் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் தங்களின் இலக்குகளை மிகத் துல்லியமாக அடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன’ என ஹவுதிகள் அறிவிச்சிருக்காங்க!”

“தாக்குதலுக்குப் பிறகு பேசிய ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் யாக்யா சாரி.. ‘எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இது வெறும் பதிலடிதான். சவுதி அரேபியா இனியும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்களும் சவுதியின் மூலோபாய இடங்கள் மீது தொடர்ந்து தாக்குவோம். எதற்கும் பயப்பட மாட்டோம்’ என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இன்னொரு பக்கம், சவுதி அரேபியா தரப்பில் இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம், குடிநீர் நிலையம் மற்றும் பொருளாதாரத்தின் முதன்மைத் தூணான அராம்கோ நிறுவனத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சவுதி அரேபியாவுக்கு மிகப்பெரிய தலைவலியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது!”

“ஏமனில் தொடரும் அப்பாவி மக்களின் உயிர்ப்பலி… சவுதியின் பொருளாதார மையங்கள் மீது ஹவுதிகளின் பதிலடி… இதனால இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் சூழல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கு. இந்த மோதல் அடுத்து எங்கே போய் முடியப்போகுது? சவுதி அரேபியா இதற்கு என்ன மாதிரியான அடுத்த கட்ட பதிலடியைக் கொடுக்கப் போகுதுங்கிற கேள்விதான் சர்வதேச அளவில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியிருக்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *