கொலை செய்ப்பட்ட 190 குழந்தைகள்.! மதகுருவுக்கு 200 ஆண்டுகள் சிறை.!

‘பட்டினியா கிடந்தா நேரா போய் கடவுளைச் சந்திக்கலாம்!’ – கேட்கவே அதிர்ச்சியா இருக்கா?

மூடநம்பிக்கையும், தவறான ஆன்மீகப் போதனைகளும் எந்த அளவுக்கு ஒரு மனுஷனை மிருகமா மாத்தும் என்பதற்கு உலக வரலாறு பல சாட்சிகளைப் பார்த்திருக்கு. ஆனா, 21-ஆம் நூற்றாண்டுல, ஒரே இடத்துல நூற்றுக்கணக்கான மக்களை ‘கடவுளைப் பார்க்கலாம்’னு சொல்லிப் பட்டினி போட்டே கொடூரமா சாகடிச்ச ஒரு சம்பவம் உலகத்தையே உலுக்கியிருக்கு..

கென்யா நாட்டின் ஷகஹோலா காடுகளுக்குள் நடந்த அந்த கொடூரமான படுகொலைகளுக்கு காரணமான மத குரு பால் மெக்கன்சிக்கு ,  நீதிமன்றம் இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு என்ன? இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் முழு பின்னணி என்ன? வாருங்கள், விரிவாகப் பார்ப்போம்.!

யார் இந்த பால் மெக்கன்சி?

“கென்யாவில் உள்ள மாலிண்டிங்கிற பகுதியில ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ என்ற மத அமைப்பை நடத்தி வந்தவர்தான் இந்த பால் மெக்கன்சி.ஆரம்பத்துல சாதாரண பிரசங்கம் பண்ணிட்டு இருந்த இவரு, போகப் போகத் தன்னோட ஆதரவாளர்கள் மத்தியில பயத்தையும் மூடநம்பிக்கையையும் விதைக்க ஆரம்பிச்சாரு.

‘உலகம் கூடிய சீக்கிரமே அழியப்போகுது!’உலகத்துல இருக்குற வேதனைகளில் இருந்து தப்பிக்கணும்னா, நீங்க உணவருந்தாமல் பட்டினியாகவே உயிர விடணும்.’அப்படிப் பட்டினியா செத்துப் போனா, எந்த வேதனையும் இல்லாம நேரா இயேசுவைச் சந்திக்கலாம்!’
– இப்படி சொல்லித் தன்னோட ஆதரவாளர்களைக் கடுமையான முறையில் மூளைச்சலவை செஞ்சாரு.”

“மெக்கன்சியோட பேச்சை உண்மையா நம்பிய நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கென்யாவில் உள்ள ‘ஷகஹோலா’  வனப்பகுதிக்குள்ள போனாங்க. வெளியுலகத் தொடர்பே இல்லாம, அங்கேயே தங்கித் தங்களைத்தானே பட்டினி போட்டுக்கிட்டாங்க.குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள்னு பலரும் உணவும் தண்ணீரும் இல்லாம துடிதுடிச்சு உயிரிழந்தாங்க. இறந்துபோனவங்களோட உடல்களை அந்த வனப்பகுதியிலேயே இரகசியமா புதைச்சு வச்சாங்க.

விஷயம் வெளியில தெரிஞ்சு கென்யா போலிஸார் அந்த அடர்ந்த காட்டுக்குள்ள சோதனையிட்டப்போ, அங்க கண்டெடுக்கப்பட்ட காட்சிகள் உலகத்தையே பேரதிர்ச்சியில ஆழ்த்தியது.ஒன்று, இரண்டு இல்லை… சுமார் 400-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அந்த வனப்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன! இதில் கொடுமை என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும் பகுதியினர் அப்பாவிச் சிறு குழந்தைகளும் பெண்களும்தான்.”

“இந்தக் கொடூர சம்பவம் வெளிவந்ததும், பால் மெக்கன்சியையும் அவனுக்கு உதவியாக இருந்த கூட்டாளிகளையும் கென்யா காவல்துறையினர் உடனடியாகக் கைது செஞ்சாங்க.நீதிமன்ற விசாரணையின் போது மெக்கன்சி என்ன சொன்னான் தெரியுமா?’ நான் யாரையும் பட்டினி கிடக்கக் கட்டாயப்படுத்தல… அவங்களாத்தான் செஞ்சாங்க’ அப்படின்னு கூச்சமே இல்லாம குற்றச்சாட்டுகளை மறுத்து இருக்காரு..

ஆனா, பலவிதமான ஆதாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில்: ஒரு பெரியவர் மற்றும் 190 குழந்தைகள் உட்பட மொத்தம் 191 பேரின் கொடூர மரணத்திற்கு பால் மெக்கன்சியே முழு முதற்காரணம் என்பது உறுதியானது.உயிரிழந்த 60-க்கும் மேற்பட்ட உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அடக்கம் செய்ய முடிந்தது.

மீதமுள்ள பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்து போயிருந்தன என்பதுதான் நெஞ்சைப் பிழியும் சோகம்..”அக்டோபர் மாதம் இந்த வழக்கில் பால் மெக்கன்சி குற்றவாளி என மொம்பாசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன:

பட்டினியால் ஏற்பட்ட 183 கொலைகளுக்கு – 100 ஆண்டுகள் சிறை.. நேரடியாகச் செய்த கொலைகளுக்கு – 100 ஆண்டுகள் சிறை..மொத்தமாக மத குரு பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..அவன் கூட சேர்ந்து இந்தச் சதிக்கு உதவியாக இருந்த 28 பேருக்கும் வெவ்வேறு சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மெக்கன்சியின் முதன்மை உதவியாளரான ஸ்மார்ட் மவக்கலாமா என்பவனுக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. கடவுளின் பெயராலும், ஆன்மீகத்தின் பெயராலும் மக்களை ஏமாற்றி உயிரைப் பறிக்கும் இதுபோன்ற போலி மத குருமார்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

200 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இவர்கள் செய்த கொடூரத்திற்கு சரியான பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.இந்தக் கொடூர சம்பவத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் மறக்காம பதிவிடுங்க. இது போன்ற விறுவிறுப்பான மற்றும் முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள ஜெம் தொலைக்காட்சியோடு எப்பொழுதும் இணைப்பில் இருங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *