
Santan Issue
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்ணினத்துக்கு எதிரான சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் அவர் பேசினாரே தவிர, எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, மக்களைத் திசைதிருப்பி, சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

